/* */

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

Vaccination Camp -நாமக்கல் மாவட்டத்தில் நாளை 38வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

Vaccination Camp -இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 15.15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, முதல் தவணை தடுப்பூசி, 13 லட்சத்து 75 ஆயிரத்து 538 பேருக்கும் (90.79 சதவீதம்), இரண்டாம் தவணை தடுப்பூசி, 11 லட்சத்து 37 ஆயிரத்து 218 பேருக்கும் (75.06 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த, 37 மெகா தடுப்பூசி முகாம்களில், 11 லட்சத்து 20 ஆயிரத்து 363 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். நாளை 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து பஞ்., டவுன் பஞ்., நகராட்சி பகுதிகளில் உள்ள, அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதா நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் உள்ளிட்ட 1,240 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்களும், முதல் தவணை போட்டு இரண்டாவது தவணைக்காக காத்திருப்பவர்களும் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Sep 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!