திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது

திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த 3. வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி ஆர்கே பேட்டை அருகே 1 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்து ஆந்திர-தமிழக எல்லையான பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பெயரில் அவரது உத்தரவின் அடிப்படையில் திருத்தணி துணை காவல் துறை துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் தமிழ்மாறன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் ஆந்திரா-தமிழக எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது வீராணத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மூன்று இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் போலீசாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து சுமார் 1.கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தத அவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில். அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோமசமுத்திரம் காலனியை சேர்ந்த வினோத்குமார் (வயது 20) சோளிங்கர் போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் (வயது 18) நாரை குளம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 18) என்பது தெரிய வந்தது. மூன்று பேரை ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story