சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சிபிஎஸ்இ 10மற்றும் 12ம் வகுப்பில் சாதனை படைத்த நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், சாதனை படைத்த, நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சேர்மன் சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ மாணவிகள், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஇஎஸ்இ) மூலம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி சாருநெத்ரா 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

மாணவர் சுபிக்சன் 500க்கு 474 மதிப்டிபண்கள் பெற்று 2ஆம் இடமும், மாணவி சாதனா 500க்கு 460 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ஆம் இடம் பெற்றுள்ளார். 10ம் வகுப்பில் பாடவாரியாக முதல் மதிப்பெண்களாக தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள், கணிதத்தில் 100 மதிப்பெண்கள், அறிவியல் பாடத்தில் 97 மதிப்பெண்கள், சமூக அறிவியல் பாடத்தில் 96 மதிப்பெண்கள், ஆங்கில பாடத்தில் 93 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பில் இப்பள்ளி மாணவர் பிரணீத் 500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும். மாணவன் ரக்சித் 500க்கு 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும். மாணவி மிருதுளா 500க்கு 464 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ஆம் இடமும் பெற்றுள்ளனர். பாடவாரியாக முதல் மதிப்பெண்களாக ஓவியத்தில் 100 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள், தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள், வேதியியல். உயிரியல். பொருளாதாரம் ஆகிய பாடங்களில் 97 மதிப்பெண்களும். வணிகவியல் பாடத்தில் 96 மதிப்பெண்களும். கணக்கு, கணக்கியல். இயற்பியல். மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் 95 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி சேர்மன் சரவணன், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story