/* */

சாலைப்போக்குவரத்தில் கடும் பின்னடைவு: 'பின்னோக்கி செல்லும்' லாரித்தொழில் - கைகொடுக்குமா அரசு?

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லாரித்தொழிலை நலிவடையாமல் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சாலைப்போக்குவரத்தில் கடும் பின்னடைவு:   பின்னோக்கி செல்லும் லாரித்தொழில் - கைகொடுக்குமா அரசு?
X

இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்கள் போக்குரவத்திலும், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் அனைத்து வகையான பொருள் போக்குவரத்திலும் சாலைப் போக்குரவத்து முக்கிய இடம் வகிக்கிறது. தமிழகம் முழுவதும் லாரிகள், ட்ரெய்லர்கள், டேங்கர்கள், மினி லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட சுமார் 12 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன. சுமார் 25 லட்சம் பேர் இத்தொழிலை நம்பி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக போக்குவரத்து தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல், பரமத்திவேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் லாரிகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த கனரக வாகனங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சரக்குகளை ஏற்றிச்சென்று இரவு, பகல் 24 மணி நேரமும் சேவை செய்து வருகின்றன.

கடந்த 1970-ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் லாரித் தொழில் துவக்கப்பட்டு படிப்படியாக வளர்ந்து இப்போது லாரி, ட்ரெய்லர், கேஸ் டேங்கர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தேசிய அளவில் முன்னணி வகித்து வருகிறது. இத்தொழிலிலும், இதன் உப தொழிலிலும், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

எனினும், கடந்த 2 ஆண்டுகளாக மிக மோசமான நிலையை, இத்தொழில் அடைந்துள்ளது. நாள்தோறும் உயர்ந்துவரும் டீசல் விலை, 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படும் நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம், ஆண்டுக்கு ஒரு முறை இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வ்வ, டயர் விலை, உதிரிபாகங்கள் விலை உயர்வு, டிரைவர்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகøளா லாரித்தொழில் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

சுங்கக்கட்டண உயர்வு

இந்தியாவில், 25.03.2020 முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. லாரிகளுக்கு சரக்கு லோடு கிடைக்காததால் லட்சக்கணக்கான லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டன. டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் உணவு கூட கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

எனினும், முதல் 3 மாதங்கள் 10 சதவீத வாகனங்கள் அத்தியாவசியப் பொருட்கள் தேவைக்காக, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் கேட்டுக்கொண்டதால் இயக்கப்பட்டன. அப்போது, நெடுஞ்சாலைகளில் சுமார் 20 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 20.04.2020 முதல் சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்த்தி வசூலிக்கப்பட்டது.

அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றிவிட்டு ஆண்டுக்கொருமுறை மொத்தமாக சுங்கக் கட்டணத்தை லாரி உரிமையாளர்கள் செலுத்த தயாராக உள்ளதாகக்கூறியும், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. நெடுஞ்சாலை சுங்கக் கட்டன கான்ட்ராக்டர்களுக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

டீசல் விலை உயர்வு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை முன் எப்போது இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து. அந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், கடந்த 2020 முதல் ஊரடங்கு நேரத்திலும், எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்த தொடங்கின. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, தனது தேர்தல் வாக்குறுதியில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4/- குறைக்கப்படும் என அறிவித்திருந்தது.

ஆனால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் நிதி நிலை சீரான பிறகு டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறிவிட்டார். தமிழகத்தில் தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.17 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு 2020 மார்ச் 23-ஆம் தேதி ரூ. 66.39/- ஆக இருந்தது. ஓராண்டில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 28 உயர்ந்துள்ளது. தமிழக அரசு லிட்டருக்கு ரூ. 4/- குறைத்தால், அண்டை மாநில விலையைவிட குறைவாக இருக்கும். இதனால் வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் தமிழகத்தில் டீசல் நிரப்பிக்கொண்டு செல்வார்கள். அரசுக்கு வரி வருவாய் அதிகரித்து , இழப்பை ஈடு செய்யும்.

ஸ்கிராப்பிங் பாலிசி

மத்திய அரசு கடந்த பிப்பரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களை இயக்க தகுதியற்றவைகளாக கூறி, வாகன ஸ்கிராப் கொள்கையை அறிவித்துள்ளது. சிறிய லாரி உரிமையாளர்கள் அவர்களே டிரைவர்களாக இருந்து தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

ஸ்கிராப்பிங் கொள்கைப்படி ஒரு வாகனத்திற்கு ஸ்கிராப் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அதே வாகனத்தை புதிதாக வாங்குவது நடைமுறை சாத்தியமற்றது. இத்திட்டத்தினால், சிறிய லாரி உரிமையாளர்கள், தொழிலை விட்டுச் செல்லும் அவலநிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும் இத்திட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கடன் தவணைக்கு அவகாசம் தேவை

கொரோனா முதல் அலையின்போது வங்கி, பைனான்ஸ் கம்பெனிகளிடம் இருந்து லாரிகள் வாங்க பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை திரும்ப செலுத்த, ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலையின்போது, பாதிப்புகள் பெருமளவில் இருந்தும் கூட, நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் கண்டுகொள்ளவில்லை.

இதனால், கடன் பெற்றுள்ள லாரி உரிமையாளர்களுக்கு தவணையை உடனடியாக செலுத்த வேண்டும் என, நிதி நிறுவனத்தனர் மிரட்டி வசூலில் ஈடுபடுகின்றனர். இந்த தொல்லையால் சில இடங்களில் லாரி உரிமையாளர்கள் தற்கொலை சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. எனவே, லாரி உரிமையாளர்களுக்கு கடன் தவணைத் தொகையை செலுத்த, அபராத வட்டியின்றி, 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.

அரசுக்கு கோரிக்கை

இருக்கும் சோதனைகள் போதாதென்று, லாரிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி, 3 எம் ஸ்டிக்கர்கள், ஜிபிஎஸ் கருவிபோன்றவற்றை வாங்கி பொருத்தாவிட்டால், எப்சி சான்றிதழ் வழங்க முடியாது என்று, தமிழக அரசு நிர்ப்பந்தம் செய்கிறது.

நெடுஞ்சாலைகளில் வாகன திருட்டு, கொலை, கொள்ளை, ஆன்லைன் அபராதம், நெடுஞ்சாலை ரோந்து படை மற்றும் ஆர்டிஓ அதிகாரிகளின் கட்டாய லஞ்ச வேட்டை போன்ற பல காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரித்தொழில், வேகமாக நலிவடைந்து வருகிறது.

எனவே, இத்தொழிலை அழிந்துவிடாமல் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளரும், நாமக்கல் தாலுக்கா லாரிஉரிமையாளர்கள் சங்க தலைவருமான வாங்கிலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 1 July 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது