/* */

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு: 463 தேர்வர்கள் பங்கேற்பு

நாமக்கல் மற்றும் கொல்லிமலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வில் 463 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு: 463 தேர்வர்கள் பங்கேற்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள். இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. வரும், ஜூலை, 24ம் தேதி, டிஎன்பிஎஸ்சி மூலம் 7,301 பணிக்காலியிடங்களுக்கான குரூப் 4 போட்டித்தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்காக மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தின் சார்பில் 10, 17 ஆகிய 2 நாட்கள் இலவச மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இதையொட்டி, இன்று, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கொல்லிமலை அரசு ஐடிஐ நிலையத்தில் இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.

இந்த முன்மாதிரி தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வைப் போல் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதன் மூலம்தேர்வு அறையில் ஏற்படும் சந்தேகங்களான ஓஎம்ஆர் சீட் நிரப்புதல், விடைகளை ஷேட் செய்தல், வினாக்களை எதிர்கொள்ளும் முறை போன்ற சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், 24 வகுப்பறைகளிலும், கொல்லிமலை அரசு ஐடிஐயில் 2 அறைகளிலும் என, மொத்தம் 26 வகுப்பறையில் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. கொல்லிமலையில் 37 பேர், நாமக்கல்லில் 426 பேர் என, மொத்தம் 463 பேர் மாதிரி தேர்வில் கலந்து கொண்டனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும், 17ம் தேதி மீண்டும் முன் மாதிரி தேர்வு மேற்கண்ட 2 மையங்களிலும் நடைபெற உள்ளது.

Updated On: 10 July 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை