/* */

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் ஓட்டுப்பதிவிற்காக 137 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தம்

Namakkal news-நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் ஓட்டுப்பதிவிற்காக 137 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தம் பணி நடந்தது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் ஓட்டுப்பதிவிற்காக  137 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தம்
X

Namakkal news -நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் ஓட்டுப்பதிவிற்காக பயன்படுத்தப்பட உள்ள வாகனங்களில், ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டார். அருகில் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் நேர்மையான மற்றும் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியர் உமா கேட்டுக்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலக, ஆயுதப்படை மைதானத்தில், தேர்தல் வாக்குப்பதிவு பணிக்காக, எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்லும் 137 வாகனங்களில், ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் உமா பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது;

நாமக்கல் மாவட்டத்தில் ஏப். 19ம் தேதி நடைபெற உள்ள, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு இந்திய தேர்தல் கமிஷன் மூலம் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எனவே, வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இந்த இறுதி 48 மணி நேரம் என்பது மிகவும் முக்கியமான கால கட்டம். அனைத்து பணியாளர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை செவ்வனே செய்திட வேண்டும். எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில், எவ்வித அரசியல் சார்பும் இன்றி நடுநிலையோடு பணியாற்றிட வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் பதற்றம் இல்லாத, அமைதியான, பாதுகாப்பான லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவை நடத்தும் வகையில் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

தேர்தல் வாக்குப்பதிவு பணிகளுக்காக, நாமக்கல் லோக்சபா தொகுதியில் 137 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் நடைபெற்றது. மேலும், வாகன பாதுகாப்பு பணியில் போலீஸ் எஸ்.ஐக்கள் மற்றும் எஸ்எஸ்ஐக்கள் நிலையில் 137 நபர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என ஆட்சியர் கூறினார்.

Updated On: 17 April 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  10. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா