/* */

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது

HIGHLIGHTS

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி ஏலம்
X

ஏலத்தில் அடுக்கி வைக்கப்பட்டடுள்ள பருத்தி மூட்டைகள். 

நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (என்சிஎம்எஸ்) செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, வேலகவுண்டம்பட்டி, எருமப்பட்டி, பவித்திரம், வரகூர் போன்ற பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 450 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

திருச்செங்கோடு, கொங்கானபுரம், ஈரோடு, அவினாசி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,411 முதல் ரூ.8,640 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7, 798 முதல் ரூ.8,911 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,799 முதல் ரூ.4,805 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்ச மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

Updated On: 20 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...