/* */

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையால் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையால்  சுனாமி எச்சரிக்கை
X

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் மேலும் விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்/

தீவு நாடான இந்தோனேசியா பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளைய பகுதியை சுற்றி அமைந்துள்ளது. எனவே அங்கு 120க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது வெடித்து சிதறி பேரழிவை உண்டாக்குகின்றன. இந்நிலையில் அங்கு ஐந்து ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று சுலவேசி மாகாணத்தில் உள்ள ருவாங் எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது .

சுமார் 2000 அடி உயரமுள்ள இந்த எரிமலை ஒரே நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட முறை வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலை விண்ணை முட்டும் அளவுக்கு தீ குழம்புகளை கக்கின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. எனவே விமானங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மனோ டா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டன.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையே அந்த எரிமலை வெடித்து சிதறியதால் வெளியேறிய சாம்பல் சுமார் 1500 அடி தூரத்துக்கு பரவியது. எனவே அந்த எரிமலையை சுற்றி ஆறு கிலோமீட்டர் வரை பொதுமக்கள் செல்லக்கூடாது என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது .இதனால் அங்கு வசிக்கும் சுமார் 11,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்கும் படி அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.

Updated On: 19 April 2024 3:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...