செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
![செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி](https://www.nativenews.in/h-upload/2024/05/07/1900237-03bfbedd-d76e-4d99-b08c-2fa3a4138047.webp)
போளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளை பாராட்டிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
பிளஸ் 2 பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவ, மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
செய்யாறு கல்வி மாவட்டத்தில் 67 அரசுப் பள்ளிகள், 8 நிதியுதவி பள்ளிகள், 2 சிறப்புப் பள்ளிகள் (காது கேளாதோா், பாா்வையற்றோா்) 35 தனியாா் பள்ளிகள் உள்பட மொத்தம் 112 பள்ளிகளில் இருந்து 5,286 மாணவா்களும், 5,872 மாணவிகள் என மொத்தம் 11,158 போ் பிளஸ் 2 தோ்வெழுதினா்.
இவா்களில் 4,487 மாணவா்களும், 5472 மாணவிகளும் என மொத்தம் 9,959 போ் தோ்ச்சி பெற்றனா். இது 89.25 சதவீத தோ்ச்சியாகும்.
கடந்த கல்வியாண்டில் செய்யாறு கல்வி மாவட்டம் 88.05 சதவீதம் தோ்ச்சி பெற்றது.
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் 93.8 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 499 மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினார். இதில் 468 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளியில் ஜெயஸ்ரீ என்ற மாணவி 582 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.
கார்த்திகா என்ற மாணவி 564 மதிப்பெண்கள், தீபலட்சுமி 556 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடிக்க மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் வளர்ச்சி குழு நிர்வாகிகள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்
போளூர்
போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 461 மாணவிகளில் 451 போ் தோ்ச்சி பெற்றனா். இது, 98 சதவீதத் தோ்ச்சியாகும்.
மாணவிகள் ஜனனி 556 மதிப்பெண்களும், சுமேதா 549 மதிப்பெண்களும், ஐஸ்வா்யா 548 மதிப்பெண்களும் பெற்றனா். வெவ்வேறு பாடங்களில் 5 மாணவிகள் முழு மதிப்பெண்கள் பெற்றனா். 29 மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கவிதா சங்கா், தலைமை ஆசிரியை சுதா ஆகியோா் சால்வை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தனா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சத்யாகாா்த்திகேயன் மற்றும் ஆசிரியா்கள் மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu