திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
![திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்](https://www.nativenews.in/h-upload/2024/05/07/1900227-60780be1-ef5c-477f-b7f8-08f76396fe80.webp)
முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டிய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி 98.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் அனைத்தும் முடிந்தும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று அதன் நிறைவுக்கு பின்பு மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இன்று காலை தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 24,021 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.47 சதவீதம் ஆகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியாா், மெட்ரிக், நிதியுதவி, சுயநிதிப் பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 12 ஆயிரத்து 724 மாணவா்கள், 13 ஆயிரத்து 827 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 551 போ் தோ்வு எழுதினா். இவா்களில், 11 ஆயிரத்து 37 மாணவா்கள், 12 ஆயிரத்து 984 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 21 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
90.47 சதவீதம் போ் தோ்ச்சி: தோ்ச்சி பெற்றவா்களில் 86.74 சதவீத மாணவா்களும், 93.90 சதவீத மாணவிகளும் என மொத்தம் 90.47 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
2022-23ஆம் கல்வி ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவ-மாணவிகளில் 89.80 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். நிகழாண்டு 90.47 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டு தோ்ச்சி விகிதம் 0.67 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 258 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பெரணமல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மடம் அரசு மேல்நிலைப் பள்ளி, செவரப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, நம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி, பட்டறைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, ஜவ்வாதுமலை குனிகந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.
பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள பனை ஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 145 மாணவ மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதினர்.
அதில் 143 மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்தனர்.
அப்பள்ளியை சேர்ந்த மாணவி எஸ்.தர்ஷினி, 558 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். தேர்ச்சி விகிதம் 98.6 சதவீதமாகும்.
முதலிடத்தை பிடித்த மாணவி தர்ஷினியை பள்ளி தலைமையாசிரியர் கோடீஸ்வரன், பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ,பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
மேலும் இப்பள்ளியில் 15 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu