/* */

கிருஷ்ணகிரி மழை வெள்ளத்தில் மீன்களை பிடிக்க குவிந்த கூட்டம்

கிருஷ்ணகிரியில் மழை வெள்ளத்தில் வந்த மீன்களை பிடிக்க போட்டி போட்டு பொதுமக்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மழை வெள்ளத்தில் மீன்களை பிடிக்க குவிந்த கூட்டம்
X

மழை வெள்ளத்தில் மீன்களை பிடிக்கும் பொதுமக்கள்.

கிருஷ்ணகிரியில் வடகிழக்கு வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளும் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலை பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, குட்டைகள் நிரம்பி மழைநீர் சாலையில் வர ஆரம்பித்தது. அப்போது பல ஆயிரக்கணக்கான மீன்கள் தண்ணீரில் அடித்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மீன் பிடிக்கப் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர்.

சிறிய மீன் முதல் 2 முதல் 3 கிலோ மீன் வரை கிடைத்ததாக பொதுமக்கள் கூறினர். அருகிலிருந்த வீடுகளுக்கு 5 கிலோ முதல் 10 கிலோ வரை மீன்களைப் பிடித்து பொதுமக்கள் எடுத்து சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ மழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிகழ்வு சுமார் பலவருடங்கள் ஆனதால் பொதுமக்களிடையே ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Updated On: 20 Nov 2021 2:10 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு