/* */

தன்னார்வலரை போக்குவரத்து ஊழியர்கள் தாக்க முயற்சி

தன்னார்வலரை போக்குவரத்து ஊழியர்கள் தாக்க முயற்சி
X

போக்குவரத்து விதிகளை மீறிய அரசுப் பேருந்து ஓட்டுனரை தட்டி கேட்டவரை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தாக்க முயற்சித்ததால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் நகரில் காலை முதல் இரவு 10 மணி வரை திடீர் திடீர் என போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் , அதை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்வது வாடிக்கையான ஒன்று.மேலும் இரவு நேரங்களில் ஒரு வழிப்பாதைகளை அகற்றி பொதுமக்கள் , கனரக வாகனங்கள் காலை 6 மணி வரை செல்ல போக்குவரத்து துறை அனுமதித்துள்ளது. மீண்டும் ஆறு மணி முதல் முக்கிய சந்திப்புகள் ஒரு வழிப்பாதையாக மாற்றுவது வாடிக்கை இதற்கு காவல்துறை தன்னார்வலர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பலரும் உதவுவார்கள்.

அவ்வகையில் இன்று மூங்கில் மண்டபம் சந்திப்பில் காவல்துறை தன்னார்வலர் மற்றும் டீக்கடை உரிமையாளர் போக்குவரத்தை ஒருவழிப்பாதையாக மாற்ற பேரி காடுகளை அமைத்தபோது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் அப்பாதையை அகற்றி வாகனத்தை இயக்க முயன்றுள்ளார். இதைப்பார்த்த தன்னார்வலர்கள் அரசு பேருந்து ஓட்டுநரிடம் நீங்களே போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது நியாயமா என கேட்ட போது இரு தரப்புக்கும் வாக்குவாதங்கள் ஆகி ஒரு கட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் தன்னார்வலர்களை அடிக்க முயற்சித்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 30 March 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை