/* */

செயின் பறிப்பு திருடனை ஓட ஓட துரத்தி அடித்த உறவினர்

செயின் பறிப்பு திருடனை ஓட ஓட துரத்தி அடித்த உறவினர்
X

இன்று முகூர்த்த தினம், திருமண நாள் என்பதால் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் நகரில் பல்வேறு திருமண மண்டபங்களில் நடைபெற்றது.

அப்போது கிழக்கு ராஜ் வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே திருடன் பெண்ணிடம் செயினை பறித்து விட்டு தப்பியோடினான். பொதுமக்கள் அவனை விடாமல் துரத்தினார்கள். இதனால் பயந்து போய், செயினை அங்கேயே போட்டு விட்டு ஓட்டமெடுத்தான்.

அனாலும் அவனை பிடிக்க வேண்டும் என்று உறவினர்கள் விடாமல், இருசக்கர வாகனத்தில் துரத்தினர்.. இதை கண்ட செயின் பறிப்பு திருடன், சாலையோரம் இருசக்கர வாகனத்தோடு நின்று கொண்டிருந்த வாலிபரிடம், தன்னை பேருந்து நிலையத்தில் விடுமாறு கேட்டான்.

அவசரமாக வீட்டிற்கு செல்ல உள்ளதால் விட முடியாது என்று அந்த வாலிபன் கூறியதால், ஆத்திரமடைந்த திருடன் கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான். இதை எதிர்பாரத வாலிபன் திருடனுடன் சண்டைக்கு செல்ல, திருடனுக்கு செம தர்ம அடி கிடைத்தது.

அதே நேரத்தில் திருடனை துரத்தி வந்த உறவினர்கள் சாலையில் அவன் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவர்களும் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர். ஆனாலும் திருடன் அசர வில்லை.. இவர்களை சமாளித்து கீழே தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டான்.

சிறிது நேரம் பரபரப்பாக அப்பகுதி இருந்தாலும், சாலையை கடந்த பலருக்கு என்ன நடந்தது என்று கவனிக்காமல் கடந்து சென்றனர்.. அவர்களும் உதவி இருந்தால் திருடனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து இருக்கலாம் என வருத்ததுடன் கூறினர்.

Updated On: 22 April 2021 4:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்