/* */

திருவண்ணாமலையில் உலக எய்ட்ஸ் தின விழா அனுசரிக்கப்பட்டது

உலக எய்ட்ஸ் தின விழா, பரிசோதனை செய்யும் நடமாடும் நம்பிக்கை மைய வாகனத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் உலக எய்ட்ஸ் தின விழா அனுசரிக்கப்பட்டது
X

உலக எய்ட்ஸ் தின விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு துறை சார்பாக இன்று நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழாவில் பொதுமக்களுக்கு ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நடமாடும் நம்பிக்கை மைய வாகனத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்பு உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். உலக எய்ட்ஸ் தின விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷகில் அகமது, துணை இயக்குனர் மருத்துவ பணிகள், அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உலக எய்ட்ஸ் தின விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

Updated On: 1 Dec 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்