/* */

அஞ்சல் துறை விபத்து காப்பீட்டு திட்டத்தில் பயனடைய அழைப்பு

Postal Life Insurance in Tamil -குறைந்த ஆண்டு பிரிமியத்தில் அஞ்சல் துறையின் சார்பில் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அஞ்சல் துறை விபத்து காப்பீட்டு திட்டத்தில் பயனடைய அழைப்பு
X

பைல் படம்.

Postal Life Insurance in Tamil -அஞ்சல் துறையில் செயல்படுத்தப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 399 செலுத்தி பொதுமக்கள் சேரலாம் என திருவண்ணாமலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி , ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.399-ல் ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீடுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

18 வயது முதல் 65 வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். விண்ணப்பப் படிவம் உட்பட எவ்விதக் காகிதப் பயன்பாடின்றி தபால்காரரிடம் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்து 5 நிமிடங்களில் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.

இத்திட்டத்தில் சேருவதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

இத்திட்டத்தில் காப்பீடு செய்யும் நபர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு வழங்கப்படும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் , பக்கவாதம் போன்றவற்றுக்கு காப்பீடு பெற முடியும்.

மேலும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளும் இந்த திட்டத்தில் பெற முடியும்.

அதன் படி உள்நோயாளியின் மருத்துவ செலவுக்கு அதிகபட்சம் ரூபாய் 60 ஆயிரம் வரையும் புற்று நோயாளியின் மருத்துவ செலவுக்கு அதிகபட்ச 30 ஆயிரம் வரையும் காப்பீடு பெறலாம்.

மேலும் விபத்தினால் உயிரிழப்பு ஊனம் பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை பெறலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு வழங்கப்படும்.

சாதாரண மக்களுக்கும் விபத்து காப்பீடு திட்டங்களின் பலன்கள். சென்றடையும் வகையில் மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது

இந்த அஞ்சல் துறை சார்பில் குறைந்த பிரிமியத்தை தொடங்கியுள்ள இந்த ரூபாய் 10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள் இணைந்து பயன் பெறலாம்.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும் அஞ்சலக இந்தியா போஸ்ட் வெப்சைட் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் .

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Oct 2022 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  4. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  5. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  7. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  8. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  10. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!