/* */

நாமக்கல்லில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கண்காணிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமான 74 ஓட்டுச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கண்காணிக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கண்காணிப்பு
X

நாமக்கல்லில் நுன் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார். அருகில் தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா.

நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமான, 74 ஓட்டுச்சாவடிகள், சிசிடிவி கேமராக்கள் மூலம் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கண்காணிக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்களுக்கான (மைக்ரோ அப்சர்வர்) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, 74 ஓட்டுச்சாவடிகள், பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. மாநில தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி இந்த ஓட்டச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பணியாற்ற 74 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நுண்பார்வையாளர்கள், ஓட்டுச்சாவடி ஏஜண்டுகளின் வருகை, அடிப்படை வசதிகள், அலுவலர்களின் செயல்பாடு, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு, ஏதாவது அசம்பாவிதங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை, ஓட்டுப்பதிவு முடியும் வரை தொடர்ந்து கண்காணித்து, அதன் விபரங்களை, உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோவேந்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Feb 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை