/* */

நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம் வாக்குப்பதிவு

நாமக்கல் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், மாவட்ட ஆட்சியர் உமா தனது வாக்கினை பதிவு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம் வாக்குப்பதிவு
X

நாமக்கல் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், மாவட்ட ஆட்சியர் உமா தனது வாக்கினை பதிவு செய்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதியில், 9 மணி நிலவரப்டி மொத்தம் 12.88 சதவீதம் வாக்குகள் பதிவானது. முக்கிய பிரமுகர்கள் அதிகாலையில் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,57,915 வாக்காளர்கள் உள்ளவனர், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2,30,584 வாக்காளர்கள், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் 2,44,113 வாக்காளர்கள், பரமத்திவேலூர் தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள், திருச்செங்கோடு தொகுதியில் 2,30,415 வாக்காளர்கள், சங்ககிரி தொகுதியில் 2,69,270 வாக்காளர்கள் என, 6 சட்டசபை தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தடுகின்றன. இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாக்குச்சவாடிகளுக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 2 மணிநேரத்தில், காலை 9 மணி நிலவரப்படி லோக்சபா தொகுதியில் மொத்தம் 12.88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாமக்கல் நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

முக்கிய பிரமுகர்கள்:

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப்பதிவு செய்தார்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, பரமதிவேலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தேர்தலில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என கூறினார்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியின், கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் சென்று சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பொட்டணம் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றிபெறுவேன் என கூறினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். திமுக கூட்டணியின் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் பொட்டணம் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டார். பாஜக வேட்பாளர் டாக்டர் ராமலிங்கம், ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் ராமலிங்கம், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என கூறினார்.

Updated On: 19 April 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...