மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பிற துறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்தக்காரர்கள் ஊரக வளர்ச்சி முகமையிலும் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிறதுறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களும் கீழ்க்காணும் ஆவணங்களை அளித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவுக்காக இணைக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு.
1. சொத்து மதிப்பு சான்றின் நகல். (சால்வன்சி) -ரூ30.00 இலட்சத்திற்கு மேல்.
2. சொத்து மதிப்பு மீதான நடப்பு ஆண்டு வில்லங்க சான்றின் நகல்- சால்வன்சி தேதி முதல் விண்ணப்ப தேதி வரை.
சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலத்திலிருந்து பெற்று வழங்க வேண்டும்
3. நடப்பு ஆண்டுக்கான வருமான வரி சான்றின் நகல்- Assessment Year 2023-24
4.Form of GST No நகல்.
5. Form of GSTR-3B நகல்.
6. அனுபவச்சான்று.
7. பான்கார்டு நகல்.
8. ஏற்கனவே பதிவில் உள்ளவர்கள் கறுப்பு பட்டியலில் இடம் பெறவில்லை, ஒப்பந்தத்தில் கலந்துக் கொள்ளாமல் இருக்கவில்லை என்பதற்கான சுயசான்று அளிக்க வேண்டும்.
9. ஓப்பந்த பதிவு கட்டணம் ரூ45000-க்கான வங்கிவரைவோலை. Collector and Chairman, DRDA, Tiruvannamalai என்ற பெயரில் திருவண்ணாமலையில் மாற்றதக்க வகையில் இணைக்க வேண்டும்.)
10. வங்கிப் புத்தக நகல்
11. ஆதார் அட்டை நகல்
12. புகைப்படம் -2 (பாஸ்போர்ட் அளவில்)
14. அனைத்து ஆவணங்களிலும் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் (Attestation) பெறப்பட வேண்டும்.
15. சம்மந்தப்பட்ட தனியரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி.
16. Construction பெயரில் பதிவு செய்யForm C Certificate & Partnership Deed பெற்று அளிக்க வேண்டும்.
மேலும் மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு மேற்கொள்ளும்போது
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி அலகில் 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒப்பந்தப்பணிகள் எடுத்து செய்ய இயலும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu