/* */

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்திற்கான முன்பதிவு துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்திற்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்திற்கான முன்பதிவு துவக்கம்
X

குளிர்காலம் துவங்கியதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்திற்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். தினசரி காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் நடைபெறும். பின்னர், நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்று, பகல் 1 மணியளவில் சுவாமிக்கு தங்கக் கவசம், வெள்ளிக்கவசம், முத்தங்கி, மலர் அங்கி முதலிய அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும்.

கட்டளைதாரர்களின் விருப்பத்தின் பேரில் மாலையில் சந்தனக்காப்பு மற்றும் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் மற்றும் தங்கத்தேர் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் குளிர் சீசன் துவங்கியதும், கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கட்டளைதாரர்கள் மூலம் சுவாமிக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காம் நடைபெறும். மாலை சுமார் 5 மணிக்கு துவங்கி இரவு 8 மணிக்கு இந்த அலங்காரம் நிறைவு பெற்று தீபாராதணை நடைபெறும். சுமார் 120 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெறும். இவ்வாறு வழிபட்டால், சுவாமி உள்ளம் குளிர்ந்து, பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வெண்ணெய்க் காப்பு அலங்காரத்திற்கான முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் அலுவலகத்தை அனுகி, கட்டணம் செலுத்தி வெண்ணெய்க் காப்பு அலங்காரத்திற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு கோயில் அலுவலகத்தை தொலைபேசி எண். 04286 233999 மூலம் தொடர்புகொள்ளலாம் என கோயில் நிர்வாக அலுவலரும், அறநிலையத்துறை உதவி கமிஷனருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Nov 2023 5:31 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...