/* */

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதி திமுக கூட்டணி கொமதேக வேட்பாளராக மாதேஸ்வரன் தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் தொகுதி  கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் வேட்பு மனு தாக்கல்
X

நாமக்கல் லோக்சபா தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக, கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தாக்கல் செய்தார். 

நாமக்கல் லோக்சபா தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திமுக கூட்டணியில், நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொமதேக தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. நாமக்கல் சேலம் ரோட்டில் அமைந்துள்ள, கொமதேக தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரஜேஷ்குமார், எம்.பி.,, மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், சிட்டிங் நாமக்கல் கொமதேக எம்.பி. சின்ராஜ், கொங்குநாடு மக்கள் எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம் சேந்தமங்கலம் பொன்னுசாமி உள்ளிட்ட திரளான திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வரை ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தாக்கல் செய்தார். கொமதேக மாற்று வேட்பாளராக கட்சியின் துணை பொது செயலாளர் கரூர் நடராஜன் (65) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Updated On: 25 March 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க