/* */

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர் கண்காட்சி துவக்கம்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா மற்றும் மலர் கண்காட்சி துவங்கியது. நாளை நிறைவு விழா நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர் கண்காட்சி துவக்கம்
X

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நடைபெறும் மலர்க்கண்காட்சியை, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி திறந்து வைத்து, பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ம் தேதி வல்வில் ஓரி விழா அரசு விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழாவி, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் நிகழ்ச்சிக்கு தøமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுõமி விழாவை துவக்கி வைத்து மலர்க்கண்காட்சியை திறந்து வைத்தார். கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை துறையின் சார்பாக மலர் கண்காட்சி மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சி ஆகியன ஆக.2, 3 ஆகிய தேதிகளில் 2 நாட்கள்நடைபெறுகிறது.

மலர் கண்காட்சியில் பழமையை நினைவு கூறும் வகையில் 40,000 வண்ண ரோஜா மலர்களால் ஆன மாட்டு வண்டி 75,000 பல்வகை மலர்களால் ஆன மலர் படுக்கை மற்றும் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. 30,000 ரோஜா மலர்கள் அலங்கரிக்கப்பட்ட பட்டாம் பூச்சி, தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30,000 பலவண்ண மண்களால் ஆன தேனீ. குழந்தைகள். பெரியவர்களைக் கவரும் வகையில் வில், அம்பு, மற்றும் காய்கறிகளைக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் வடிவம் மற்றும் காதலர் சின்னம் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இம்மலர் கண்காட்சியில் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம் சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்கப்பறவை, கிளாடியோஸ், சம்பாங்கி ஆகிய மலர்களால் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதன் முறையாக மருத்துவப்பயிர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மருத்துவ பெயரில், தாவரவியல் பெயர், பயன்பாடுகளுடன் மூலிகை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

திரளான மலைவாழ் மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மலர்க்கண்காட்சி மற்றும் அரசுத்துறை கண்காட்சியை பார்வையிட்டனர். செம்மேடு வல்வில் ஓரி அரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாளை 3ம் தேதி நிறைவு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Updated On: 2 Aug 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு