/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகள் ஆய்வு

Jal Shakti Abhiyan in Tamil -திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு பாதுகாப்புத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகள் ஆய்வு
X

பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியினை பார்வையிட்ட கலெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள்.

Jal Shakti Abhiyan in Tamil-திருவண்ணாமலையில் ஜல் சக்தி அபியான் திட்டத்திற்கு செயல்படும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டம் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்பு துறை இயக்குனர் மன்மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் தெரிவிக்கையில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 வட்டங்களில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 20-22 ஆம் ஆண்டிற்கான மழைநீர் சேகரிப்பு இயக்கம் கடந்த மார்ச் ஜனாதிபதியால் துவக்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஐந்து பணிகள் நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேமிப்பு ஆகிய ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டிலும் , பழமையான நீர் பிடிப்பு பகுதிகளான ஏரி மற்றும் குளங்களை சீரமைத்தல் பணிக்கு ரூபாய் 1826 லட்சம் மதிப்பீட்டிலும் , நீர் பிடிப்பு மேம்படுத்துதல் ரூபாய் 1973 லட்சம் மதிப்பீட்டிலும் , பெருவாரியான காடு வளர்த்தல் ரூபாய் 1668 லட்சம் மதிப்பீட்டிலும் , மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

மேலும் ஊரக வளர்ச்சி முகமை துறையின் கீழ் அரசு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி ஒவ்வொரு பணிகளையும் கால அளவிற்கு விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை இயக்குனர் மன்மோகன் கேட்டுக் கொண்டார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியினை பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஜல் சக்தி கேந்திரா நீர் வங்கியை பார்வையிட்டு ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளின் விவரங்களை கேட்டு அறிந்தார்.

நிகழ்ச்சியில் மத்திய அரசின் நிலத்தடி நீர் துறை துணை இயக்குனர் ராணி , மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் , கூடுதல் ஆட்சியர் பிரதாப் சிங் , ஊரக வளர்ச்சி முகமது செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சையது சுலைமான், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  2. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  3. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  6. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  8. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  9. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?