/* */

திருவண்ணாமலையில் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன்

தீபத்திருவிழாவில் குழந்தை வரம் கேட்டு வேண்டுதல் செய்த பக்தர்கள், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன்
X

திருவண்ணாமலையில் கரும்புத்தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்


திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜன், குழந்தை பேறு இல்லாமல், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டார். அதனால், அண்ணாமலையாரே, வள்ளாள மஹாராஜாவுக்கு குழந்தையாக பிறந்ததாக, தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டு வேண்டுதல் வைப்பர். அதன்படி, குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியர் தங்கள் குழந்தையை, கரும்பு தொட்டிலில் வைத்து சுமந்து, மாடவீதி வலம் சென்று, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதனால் கரும்புகள் அதிகளவு விற்பனையானது.

கோவில் வளாகத்திலேயே திருவிழா நடந்தாலும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கடவுளுக்கு தங்கள் நேர்த்திக்கடனைச் செய்ய வேண்டுமெனக் கரும்பு தொட்டிலோடு மாடவீதியை வலம் வருகிறார்கள்.

ஒவ்வொரு தீபத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரும்பு தொட்டில் மூலம் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா விதிகளைக்காட்டி திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தீபத் திருவிழா நடைபெறும் 14 நாட்களும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.

Updated On: 17 Nov 2021 6:42 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  3. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  4. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  5. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  6. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  8. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  9. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  10. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!