ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி பதிவு

ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி பதிவு
X

Erode news- குறைந்த வெயில் (மாதிரிப் படம்).

Erode news- ஈரோடு மாவட்டத்தில் பல நாட்களுக்கு பிறகு இன்று (16ம் தேதி) 100 டிகிரிக்கு கீழ் வெயில் பதிவாகி உள்ளது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் பல நாட்களுக்கு பிறகு இன்று (16ம் தேதி) 100 டிகிரிக்கு கீழ் வெயில் பதிவாகி உள்ளது.

கோடை காலம் தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை கொளுத்தி வந்தது. கடந்த 2ம் தேதி இதுவரை இல்லாத அளவாக உச்சபட்சமாக 111.2 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில், மாவட்டத்தில் கோடை மழை பொழிய தொடங்கியது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமலேயே வீசி வந்த நிலையில், பல நாட்களுக்கு பிறகு இன்று (16ம் தேதி) 100 டிகிரிக்கு கீழ் வெயில் பதிவாகி உள்ளது. அதாவது, வெயிலின் அளவு 96.44 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.

இதனால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. மேலும், இதுபோல் அடுத்து வரும் நாட்களிலும் குளிர்ச்சியான சூழல் நிலவுமா.? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story
அமேசான்ல 5000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்க முடியுமா? இப்பொவேய் போடுங்க ஆர்டர