ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க நடைபாதை
திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபயிற்சி (கோப்பு படம்)
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தை சுற்றியுள்ள பகுதியில் ரூ. 7.5 கோடி மதிப்பில் புதிய நடைபாதைகள் பூங்காக்கள் அமைத்து பொலிவூட்டும்ட பணி தொடங்கி நடந்து வருகிறது .
திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தை சுற்றியுள்ள ரேஸ் கோர்ஸ் சாலை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாகும். மோட்டார் போக்குவரத்து இல்லாத நடைபாதையாக உருவாக்கும் திட்டத்தில் உள்ள இப்பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மூத்த குடிமக்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர். இந்த நடைபாதையில் தற்போது பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தி பொலிவூட்டும் திட்ட பணி மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அண்ணா விளையாட்டு அரங்கத்தை சுற்றியுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை ஒட்டி உள்ள பகுதிகளை மாநகர மக்களின் பொழுதுபோக்கு மண்டலமாக மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மூலதன மானிய நிதியின் கீழ் திரு 7.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் திட்டத்தில் முதல் கட்டமாக காஜாமலை பகுதி ரேஸ்கோர்ஸ் சாலை இடையே உள்ள 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வழுக்காத தளத்துடன் கூடிய நடைபாதைகள் அமைக்கப்படுகிறது.
தியானம் ,யோகா மையத்துடன் கூடிய மூத்த குடிமக்களுக்கான பூங்கா, பல்வேறு விளையாட்டு அமைப்புகளுடன் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட உள்ளது. கலை சிற்பங்கள் யோகா மற்றும் தியான மையம், செயற்கை நீரூற்றுகள் திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அம்சங்களும் அடுத்தடுத்து உருவாக்கப்பட உள்ளன. பாரம்பரிய விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன. இப்ப பணிகள் அனைத்தும் 2025 டிசம்பர் மாதத்திற்குள் படிப்படியாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இவர் அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu