/* */

திருவண்ணாமலையில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைய உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்கான இடத்தை அமைச்சா் நேரில் ஆய்வு செய்தாா்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர் ஆய்வு
X

அரசு பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கான இடத்தை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 20 ஆயிரம் சதுர அடியில் ஆறு தளங்கள் கொண்டு அமைய உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்கான இடத்தை அமைச்சா் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த மருத்துவமனையில் இதய நோய் மருத்துவம், இதய அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் நோய் மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, இறப்பை குடவியல் நோய் மருத்துவம், இறப்பை அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக நோய் மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு , புற்றுநோய் மருத்துவம், புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு, தோல் நோய் மருத்துவம், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை பிரிவு, ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, சுவாச மருத்துவம், விழித்திரை மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் கண் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, மகளிர் புற்றுநோய் மருத்துவம், மகளிர் குழந்தையின்மை சிகிச்சை பிரிவு , சுவாச நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு, கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு , புறநோயாளிகள் பிரிவு ,மயக்கவியல் ,குருதி வங்கி, மத்திய ஆய்வகம் என பல பிரிவுகளில் பல்நோக்கு மருத்துவமனை அமைய உள்ளது.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் எம்எல்ஏ கிரி, தமிழக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், சிறப்பு தலைமைப் பொறியாளா் சோமசுந்தரம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் , திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி, தமிழ்நாடு அரசு உடல் உழைப்புத் தொழிலாளா், சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினா் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

Updated On: 28 Oct 2023 12:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  5. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  6. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  7. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  8. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  9. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!