தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர்கள் பிரசாந்த், செங்கம் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில்;
இந்தத் தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்துவது, பாகிஸ்தான் அரசியல், ராமர் கோவில் அரசியல், அதானி அரசியல் உள்ளிட்டவைகளை பாஜகவினர் பேசி வருகின்றனர் . தோல்வி பயத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர். ஐநா சபை, உச்சநீதிமன்றம் ஆகியோர் கண்டிக்கும் விதமாக இந்த மத்திய அரசு உள்ளது.
மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து சில உண்மைகளை பேசி வருகிறார்.
நெல்லை காங்கிரஸ் தலைவர் படுகொலை சம்பவத்தில் நேற்றைக்கு காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்டு அறிந்தேன். அறிவியல் ரீதியாகவும் தடயங்களை சேகரித்து வருவதாகவும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்துள்ளன. சில தினங்களில் குற்றவாளியை நெருங்கி விடுவோம். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சிறப்பாகவும் சிந்தித்து நிதானமாகவும் செயல்படுகின்றனர். குற்றவாளி யாராக இருந்தாலும் விடமாட்டோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று டெல்டா பகுதியில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் வாரணாசிக்கு செல்ல முயன்றார்கள் அங்கு செல்ல முற்பட்டவர்களை ரயில்வே துறை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தியதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறோம்.
ராகுல் காந்தி இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்று முதல்வரே கூறியுள்ளார்.
காமராஜரின் ஆட்சியை கொண்டு வருவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் காங்கிரஸ் எடுத்து வருகிறது என செல்வ பெருந்தகை கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu