/* */

தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை

தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள் தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
X

தொலைத்தொடர்பு அதிகாரிகள் போல் பேசி நிதி மோசடிக்கு முயற்சி செய்யும் போலி செல்போன் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மத்திய அரசின் தொலைதொடர்பு துறை பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- தொலைதொடர்புத் துறை அல்லது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையரக அதிகாரிகள் போல் சில இணைய குற்றவாளிகள் பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசி நிதி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.

அவர்கள் அதிகாரிகள் போல் நடித்து உங்கள் செல்போன் இணைப்பை துண்டிப்போம். என்றோ அல்லது உங்கள் செல்போன் சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றோ மிரட்டுவார்கள். அதன் மூலம் தனிப்பட்ட தகவல்களை திருடி இணைய குற்றங்களிலோ அல்லது நிதி மோசடியிலோ ஈடுபடுவார்கள். இதுபோன்று தங்கள் சார்பில் பேசுவதற்கு தொலைதொடர்பு துறையோ அல்லது ட்ராய் அமைப்புகளோ யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை.

ஆகவே போலி செல்போன் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும் நம்பி ஏமாற வேண்டும் என்றும் ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். அவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும். மோசடி அழைப்புகள் குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் இணைய குற்றங்களுக்கு தொலைதொடர்பு இனங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முடியும். இணைய குற்ற உதவி மைய எண் 1930ல் தொடர்பு கொள்ளலாம். இணையத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் போல் 92 என்ற வெளிநாட்டு செல்போன் எண்ணில் தொடங்கும் வாட்ஸ் அப் அழைப்புகளில் பேசும் மோசடியாளர்கள் குறித்து தொலைதொடர்புத் துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் தொலைதொடர்புத்துறை, மாநில போலீஸ் ஆகியவை இணைந்து நடந்திய கூட்டு நடவடிக்கையில் 28 ஆயிரத்து 200 செல்போன்களும், 20 லட்சம் செல்போன் எண்களும் இணைய குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. அதனால் அந்த செல்போன்களையும் எண்களையும் முடக்க தொலை தொடர்பு உத்தரவிட்டு உள்ளது.

Updated On: 15 May 2024 5:08 PM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  செல்லூர் ராஜூ நகர்வின் பின்னணி என்ன?
 2. தேனி
  என்னை தாண்டி தொட்டுப்பார்...! பிரதமர் மோடி ஆவேசம்....!
 3. தேனி
  விபத்தில் அதிபர் மரணம்...இனி என்ன ஆகும் ஈரான்?
 4. திருத்தணி
  முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்!
 5. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 6. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 7. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 8. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
 9. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 10. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்