தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 19-ஆம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அனைத்து துறைகளும் தயாராக இருக்கவும், அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே. 15) மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, ஆகிய23 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu