/* */

ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி

ஈரோடு அருகே திருமணமாகாத விரக்தியில் குடிபோதையில் தாயை கழுத்தறுத்துக் கொன்ற மகன், தனக்கு தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

HIGHLIGHTS

ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
X

பைல் படம்.

ஈரோடு அருகே திருமணமாகாத விரக்தியில் குடிபோதையில் தாயை கழுத்தறுத்துக் கொன்ற மகன், தனக்கு தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே தச்சங்கரை வழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுசிலா (வயது 70). கணவர் முத்துசாமி இறந்துயடுத்து, மூத்த மகன் விஜயகுமாருடன் (வயது 42) வசித்து வந்தார். விஜயகுமார் திருமணமாகாதவர். மதுப்பழக்கம் இருப்பதால் தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்த விஜயகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தாயார் சசிகலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், உடனடியாக வெள்ளோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளோடு காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சசிகலாவின் சடலத்தை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதே நேரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயகுமாரை மீட்ட காவல்துறையினர், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினரின் முதல் கட்ட தகவலில், விஜயகுமாரின் தம்பியான, சின்னத்தம்பி (வயது 39) என்பவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. தனது தம்பிக்கு திருமணமான நிலையில், 42 வயதான தனக்கு இன்னும் திருமணமாகாத விரக்தியில் இருந்துள்ளார்.

இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு, தனக்கு திருமணம் செய்து வைக்காத தாயை, மது அருந்திவிட்டு வந்து குடிபோதையில் கொலை செய்து விட்டதாகவும், அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததாக கூறினர்.

Updated On: 16 May 2024 12:30 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...