/* */

7 மாதத்திற்கு பின் சாத்தனூர் அணை திறப்பு

கொரோனா தொற்று குறைவு காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏழு மாதங்களுக்குப் பிறகு சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

7 மாதத்திற்கு பின் சாத்தனூர் அணை திறப்பு
X

பைல் படம்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் பூங்காக்கள் அணைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தளர்த்தி அரசு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , வெளியிட்ட அறிக்கையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது என அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடந்த 7 மாதங்களாக தடைசெய்யப்பட்டிருந்த சாத்தனுர் அணை திறக்கப்பட்ட செய்தி அறிந்த சுற்றுலாப் பயணிகள் சாத்தனூர் அணைக்கு வந்து குவிந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பம் குடும்பமாக சாத்தனூர் அணைக்கு வந்தது தங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் அரசு மேலும் பல தகவல்களை அறிவிக்க வேண்டும் எனவும் இந்த சாத்தனூர் அணையை மீண்டும் நன்கு பராமரித்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்த வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 28 Feb 2022 6:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!