/* */

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க அறிவுரை...!

சமீப காலமாகவே பல்வேறு நீர் ஆதாரங்களில் மர்ம நபர்கள் அருவருத்தக்க செயல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க அறிவுரை...!
X

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (கோப்பு படம்)

நீர் ஆதாரங்களில் ஏற்படும் கசப்பான சம்பவங்களை தவிர்க்க சுற்றுச்சுவர் மற்றும் வேலி அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு ஆற்றுப் படுகைகளிலிருந்தும், ஆழ்துளை கிணறு மற்றும் பல்வேறு ஆழ்துளை கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இது மட்டும் இல்லாது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கிணறுகளின் மூலமும் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறுகள் மூலம் தரப்படும் நீரானது மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சிறிய அளவிலான தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு , அதன் பின் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து செயல்படுத்தி வருகிறது.

கடந்த சில வருடங்களாக பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் , நீர் தேக்கங்கள் , நீர் ஆதாரங்கள் ஆகியவையில் தவறான நபர்கள் மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இது பல்வேறு பிரச்சனைகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.

இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் உள்ள நீர் ஆதாரங்கள் மற்றும் விநியோக கட்டமைப்புகளின் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் நீர் ஆதாரங்கள், மேல்நிலை தொட்டிகள், பம்புகள் உள்ள பகுதிகளில் சுற்று சுவர் அல்லது உயரமான வேலி அமைத்து அவற்றை பூட்டி உள்ளாட்சிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிக்கு செல்லும் ஏணியை தகடு அமைத்து அதை பூட்டிக் கொள்ள வேண்டும் எனவும் , இதனை ஊராட்சிகள் செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இதற்கான நிதிகளை பஞ்சாயத்து பொது நிதி மற்றும் கனிமவள நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை பயன்படுத்தி விரைவில் முடிக்க அறிவுறுத்தி உள்ளார். இதனால் கசப்பான சம்பவங்களை தவிர்க்கலாம் எனவும் பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 May 2024 5:00 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...