/* */

நெல்லை மாவட்டத்தில் 40 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு

நெல்லையில் 1,535 பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் 40 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு
X

வகுப்புகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் அமரவைக்கப்பட்டனர்.

கொரோனா நோய் பரவல் குறைந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் 40 நாட்களுக்கு பின் இன்று முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. மாவட்டத்தில் 1,535 பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நாடுமுழுவதும் உருமாறிய வைரசாக கொரோனா ஒமிக்ரான் 3 - வது அலையாக வேகமாக பரவத் தொடங்கியது. நெல்லை மாவட்டத்திலும் நாள் ஒன்றுக்கு 800 பேர் வரை பாதிக்கப்பட்டனர். பரவல் அதிகமாக இருந்து இதனைத்தொடர்ந்து தினமும் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் போடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படாமல் தொடர்ந்து மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை , மேலும் தற்போது கொரோனா பாதிப்பு குறையவும் தொடங்கி உள்ளதால் இன்று முதல் பள்ளி கல்லூரிகளை திறக்க அரசு ஆணை பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் 40 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 1,535 பள்ளிகள், இதில் 1209 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும், 326 உயர்நிலை மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளும் அடங்கும். அனைத்து பள்ளிகளும் இன்று முதல் செயல்பட தொடங்கியது. 15 வயது முதல் 18 வயதுடைய மாணவ- மாணவிகள் தடுப்பூசி போட்டுள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவிய பின் முக்கவசம் அணிந்த நிலையில் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். வகுப்புகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் அமரவைக்கப்பட்டனர். பள்ளி கழிப்பறை, உணவுக்கூடம், மாணவர்கள் உணவருந்தும் இடம் போன்றவையும் சுத்தம் செய்திட அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 1 Feb 2022 5:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  2. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  3. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  5. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  6. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  10. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!