/* */

நெல்லையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி

நெல்லையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி
X

நெல்லையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்றது.

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்றது.

இந்திய அரசின் நேரு யுவகேந்திரா மற்றும் என் பி என் கே நல்லதை பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் ஆகியவை இணைந்து திருநெல்வேலி டவுண் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது.

இதில் வாக்காளர் விழிப்புணர்வு கோல போட்டியை சிறப்பாக நடத்தியது. 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வண்ண-கோலங்களால் வாக்காளர் தின விழிப்புணர்வுவை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர். கோலப் போட்டியில் முதல் பரிசை பாளையங்கோட்டை காமாட்சி, இரண்டாம் பரிசை என்.ஜீ.ஓ காலனி வேதிகா மற்றும் மூன்றாம் பரிசை தூத்துக்குடி பாகம் பிரியாள் ஆகியோர் பெற்றனர்.

விழாவிற்கு தலைமையேற்று நெல்லை வருவாய் வட்டாட்சியர் சண்முக சுப்ரமணியன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். லிட்டில் பிளவர் கல்வி குழும சேர்மன் அ.மரியசூசை சிறப்புரை வழங்கினார். நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொதுச் செயலாளர் முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் வாக்காளர் விழிப்புணர்வு உரை வழங்கினார்.

NPNK - நல்லதைப் பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம். ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் மு.வெ.ரா, மற்றும் சமூக ஆர்வலர் கவிதா சங்கர் நடுவராக செயல்பட்டார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா சங்கர் மற்றும் மாரியப்பன். ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 27 Jan 2022 11:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...