/* */

தஞ்சாவூரில் கருணாநிதி அண்ணா உருவச்சிலைகள: தமிழக முதல்வர் திறப்பு

தஞ்சை கலைஞர் அறிவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளமுன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி உருவ சிலைகளை திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் கருணாநிதி அண்ணா உருவச்சிலைகள: தமிழக முதல்வர் திறப்பு
X

தஞ்சாவூரில் நிறுவப்பட்ட அண்ணா, கருணாநிதி உருவச்சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 அடி உயரமுள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி முழு உருவ சிலையினை திறந்து வைத்தார்.

இரண்டு நாள் பயணமாக தஞ்சை வந்த தமிழக முதல்வர் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 அடி உயரமுள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, மற்றும் கருணாநிதி முழு உருவ சிலைகளை திறந்து வைத்தார். திறந்து வைத்தபின் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

இரவு தனியார் விடுதியில் தங்கி, நாளை காலை 10 மணிக்கு தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, 43 ஆயிரம் பயனாளிகளுக்கு, 237 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் 98.77 கோடி மதிப்பிலான 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் இரண்டாம் உலக போர் நினைவுச் சின்னமான மணிக்கூண்டு உடன் கூடிய ராஜப்பா பூங்கா மற்றும் கீழவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சரபோஜி மார்க்கெட் உள்ளிட்டவற்றை திறந்துவைக்கும் அவர், 1229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Updated On: 29 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி