/* */

காற்றுடன் பெய்த மழை: மரம் விழுந்ததில் வாகனங்கள் சேதம்

பாவூர்சத்திரம் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததில், மரம் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதம்

HIGHLIGHTS

காற்றுடன் பெய்த மழை: மரம் விழுந்ததில் வாகனங்கள் சேதம்
X

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதில் வாறுகாலில் கிடந்த சாக்கடையுடன் குப்பையும் சேர்ந்து தேங்கியதால் அந்த பகுதி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும் கிழப்பாவூர் மைதானம் அருகில் உள்ள பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் சேதமடைந்தது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த சுரண்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.



Updated On: 5 May 2021 4:10 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு