/* */

மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் தமிழாய்வு மன்ற இலக்கிய விழா

மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், செங்காந்தள் தமிழாய்வு மன்றம் சார்பில் இலக்கிய விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் தமிழாய்வு மன்ற இலக்கிய விழா
X

பைல் படம்.

மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், செங்காந்தள் தமிழாய்வு மன்றம் சார்பில் இலக்கிய விழா நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி தலைமை வகித்தார். பிளஸ் 1 மாணவி ஜெசிகா வரவேற்றார். ப.வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் திலகம், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இலக்கியங்களில் பெண்கள் என்ற தலைப்பில் பேசியதாவது:

சங்ககால பெண் புலவர்களின் சிறப்புகளை எடுத்துரைக்க நேரம் போதாது. காரைக்கால் அம்மையார், ஆண்டாள் மற்றும் அவ்வையாரின் கருத்துக்களை உள்வாங்கி, அதன்படி செயல்பட வேண்டும். நம் தமிழ்மொழி தொன்மை வாய்ந்த மொழி, வாழ்வியல் மொழி. ஆனால், பிழைப்பு மொழி அல்ல. தமிழ் மொழியில் உள்ள அறம் சார்ந்த கருத்துக்களை மாணவியர் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். இலக்குகளை தீர்மானித்து வெற்றி பெற உழைக்க வேண்டும் என கூறினார்.

ஆசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் பார்வதி, தனலட்சுமி, வீரராகவன், பாண்டியராஜன், தீபா ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 1 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  3. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  5. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  6. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  7. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  9. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!