/* */

ராசிபுரம் அரசு அங்காடியில் ரூ.4.56 கோடிக்கு பட்டுக்கூடுகள் விற்பனை: கலெக்டர்

ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில், இதுவரை ரூ.4.56 கோடி மதிப்பில் பட்டுக்கூடு விற்பனை நடைபெற்றுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ராசிபுரம் அரசு அங்காடியில் ரூ.4.56 கோடிக்கு பட்டுக்கூடுகள் விற்பனை: கலெக்டர்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில், இதுவரைரூ. 4.56 கோடி மதிப்பில் பட்டுக்கூடு விற்பனை நடைபெற்றுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட பட்டுக்கூடு உற்பத்தியாளர்களின் வருமானத்தை பெருக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அரசு பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், பட்டுவளர்ச்சித்துறையின் கீழ், ராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, பரமத்தி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில், பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் 1,304 விவசாயிகள், 2,459 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

மாதம் தோறும், 1,000 விவசாயிகள், பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு, சராசரியாக 50 ஆயிரம் கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து வருகின்றனர். 2021, ஆக., 24 வரை, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை, தங்களது சொந்த செலவில், ஒவ்வொரு மாதமும் சேலம், தர்மபுரி, கோவை மற்றும் பெங்களூரில் பட்டுக்கூடு அங்காடிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை இருந்தது.

தற்போது, தமிழக முதல்வரின் நடவடிக்கையால், ராசிபுரம் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி கடந்த 20221ம் ஆண்டு ஆக. 24ல் தமிழக அரசால் துவக்கி வைக்கப்பட்டது. இங்கு, பட்டுக்கூடு கொள்முதல் செய்ய வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பட்டு நூற்பாளர்கள் வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில், இதுவரை, நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 650 பட்டு விவசாயிகள், 82.173 மெ.டன் பட்டுக்கூடுகளை, ரூ. 4.56 கோடி மதிப்பில் விற்பனை செய்து பயன்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Aug 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?