வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!

வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
X

வாடிப்பட்டி அருகே  பால தண்டாயுதபாணி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய  வைகாசி விசாக திருவிழா.


வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வாடிப்பட்டில்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, குலசேகரன்கோட்டை தர்மராஜன் கோட்டையில் இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் கோம்பை கரட்டில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்து டன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி பால தண்டாயு தபாணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

நேற்று காலை 9.35 மணிக்கு கோவில் மகா மண்டபத்தில் சேவல் கொடி ஏற்றப்பட்டது. அதன் பின் 9.45 மணிக்கு தெப்பக்குளம் முன்பாக மயில் அருகில் உள்ள கம்பத்தில் சேவல் கொடி ஏற்றி மாலை அணிவித்து தீபாராதனை செய்யப்பட்டது. அதன் பின், ஏராளமான பக்தர்கள் வைகாசி விசாகத்தன்று பால்குடம் பூக்குழி இறங்குவதற்கு காப்பு கட்டினர். இதன் முக்கிய திருவிழாக்கள் வரும் 22ந் தேதி புதன்கிழமை வைகாசி விசாகத்தன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாடிப்பட்டி மௌன குருசாமி மடத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து அழகு குத்தி, பூக்குழி இறங்கி 3 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுபாணி கோவிலில் பாலதண்டாயுதபாணிக்கு பாலபிஷேகம் செய்வார்கள்.

கோவில் செல்லும் சாலையில் வழி முழுவதும் பந்தல் அமைத்து உபயதாரர்கள நீர் மோர், அன்னதானங்கள் வழங்குவார்கள். 23ந் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பால தண்டாயுதபாணி கோயிலில் இருந்து பட்டு பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வல்லவக கணபதி கோயிலில் வழிபாடு செய்து அம்பலகாரர் திருக்கண்ணில் அபிஷேகம் செய்து, கள்ளர் திருகண்ணில் இரவு தங்குவார்.

24ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சீர்பாதம் தாங்கிகளுக்கு பாதிக்கப்பட்ட ஈ கள்ளர் திருக் கண்ணில் இருந்து புறப்பட்டு, வல்லப கணபதி கோவிலில் ராமலிங்க சேர்வை தானம் வழங்கப்பட்ட இடத்தில், மல்லிகை மலர்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பாலதண்டாயுத பாணி எழுந்தருளி நள்ளிரவு 12 மணிக்கு பூ பல்லக்கில் புறப்பட்டு வாடிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, தாதம்பட்டி, நீரேத்தான், போடி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய வீதிகளில் உலா செல்வார்.

வழியில் ஏராளமான பக்தர்களின் திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். விடிய விடிய நடக்கும் இந்த பூ பல்லாக்கு உற்சவம் முடிந்து மறுநாள் மதியம் 2 மணிக்கு கோயிலை சென்றடைவார். அந்த 3 நாட்களும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன் ஏற்பாடுகளை, சொக்கையாசாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தங்கிகள், வாடிப்பட்டி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?