/* */

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.38 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.38 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.38 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
X

ஏலத்திற்கு வந்திருந்த பருத்தி மூட்டைகள்

நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (என்சிஎம்எஸ்) வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,350 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 400 முதல் ரூ.8 ஆயிரத்து 22 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.8 ஆயிரத்து 50 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 899 முதல் ரூ.5 ஆயிரத்து 899 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 25 Aug 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு