/* */

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் மீண்டும் தங்கத்தேர் இழுக்கும் வைபவம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு முதன்முறையாக தங்கத் தேரோட்டத்தை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் மீண்டும்  தங்கத்தேர் இழுக்கும் வைபவம்
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் மீண்டும் தங்கத்தேர் இழுக்கும் வைபவத்தை அமைச்சர் மதிவேந்தின், எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாமக்கல்லில் புராண சிறப்பு பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுவாமிக்கு தினசரி காலை வடை மாலை அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து அபிசேகம் நடைடபெற்று மதியம் 1 மணிக்கு, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம், முத்தங்கி அலங்காரம், மலர் அலங்காரம் உள்ளிட்டவை கட்டளைதாரர்களால் மேற்கொள்ளப்படும். மாலை சந்தனக்காப்பு, வெண்ணைக்காப்பு போன்ற அலங்காரம் நடைபெறும். இரவு 7 மணிக்கு, பக்தர்கள் முன்பதிவு செய்து, திருக்கோயில் வளாகத்தில் தங்கத்தேர் இழுந்து வழிபாடு செய்யலாம்.

தமிழகத்தில், கொரோனா ஊராடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சுவாமிக்கு தங்கத்தேர் இழுக்கும் வைபத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்துள்ளதால் மீண்டும் தங்கத்தேர் இழுக்கலாம் என்று அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் தங்கத்தேரை இழுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். திரளான திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருக்கோயில் உதவி கமிஷனர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 26 Oct 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  4. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  5. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  8. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  9. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  10. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!