கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
X

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

கோடை விடுமுறையையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

கோடை விடுமுறையையொட்டி, கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோபி கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணையில் இருந்து தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் குளிப்பதற்காக ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் கோடை வெயில் கொளுத்துவதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், விடுமுறை நாளான இன்று (மே.12) ஞாயிற்றுக்கிழமை கொடிவேரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், அங்கு விற்கப்படும் வறுத்த மீன்களை வாங்கி சுவைத்தனர். மேலும், வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த உணவுகளை குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டனர்.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!