10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்..!

தோரணமலை கோயில் நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து கடையம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் சித்தர்கள் முனிவர்களால் வழிபடப்பட்ட புராண சிறப்பு கொண்ட இந்த கோவிலில் ஆன்மீக பணிகள் மட்டுமின்றி பல்வேறு அறப்பணிகளும் நடைபெற்று வருகிறது
கோடை விடுமுறையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வண்ணம் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கடையம் சத்திரம் பாரதி பள்ளி மற்றும் ஆதர்ஷ் வித்யாலயா உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.பரிசுகளை கடையம் கிராம நிர்வாக அலுவலர் சுடர் செல்வன் வழங்கினார்
அன்னையர் தினத்தை முன்னிட்டு தோரமலை ஸ்ரீ முருகன் கோவிலில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது குழந்தைகள் அம்மாக்களுக்கு மாலை அணிவித்து தாய்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர் மேலும் பாவூர்சத்திரம் ஜெய்ஹிந்த் மார்ஷியல் ஆர்ட்ஸ் தற்காப்பு கலை பயிற்சி மாணவர்களின் கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது
மேலும் பூலாங்குளம் சேவா பாரதி மாணவ மாணவியர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் ஜோதி செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் காலை முதல் அன்னதானம் நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu