/* */

நாமக்கல் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

நாமக்கல் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரின் பேரில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
X

பைல் படம்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பரமத்தி வேலூர் அருகில் உள்ள பொத்தனூரைச் சேர்ந்த மதிவானன் (52) என்பவர் இப்பள்ளியில், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், சம்பவத்தன்று தனது செல்போன் வாட்ஸ்அப்பில், பிறந்த தேதி மற்றும் இறப்பு தேதி (4.12.2021) எனக்குறிப்பிட்டு, நான் இறக்கப்போகிறேன் என்பதை மறைமுகமாக பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவியர் சக மாணவியர், சம்பந்தப்பட்ட மாணவியை, மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, பதில் இல்லை. சந்தேகம் அடைந்து அவரது வீட்டுக்கு சென்றபோது, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மாணவியிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது, பள்ளியில் உள்ள அறிவியில் ஆசிரியர் தனக்கும் சில மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். வெளியே சொன்னால் தேர்வில் மதிப்பெண் குறைத்து விடுவேன் என மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இதையொட்டி, அம்மாணவியின் பெற்றோரும், மேலும் சில மாணவிகளின் பெற்றோரும், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சிஇஓவிடம் புகார் அளித்தனர்.

இதையெடட்டி பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி, நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து பொத்தனூர் வீட்டில் இருந்த ஆசிரியர் மதிவாணனை கைது செய்து விசாரணை நடத்தி செய்து வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...