/* */

தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரம் வழக்ககோரி ஆஷா பணியாளர்கள் கலெக்டரிம் மனு

தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரம் வழங்ககோரி ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரம் வழக்ககோரி ஆஷா பணியாளர்கள் கலெக்டரிம் மனு
X

கிராமப்புற சுகாதாரத் திட்ட ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.

ஆஷா பணியாளர் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் வழங்கியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது;

நாமக்கல் மாவட்ட சுகாதார மையங்களில் (சிஎச்சி) ஆஷா பணியாளர்களா 42 பேர் பணியாற்றி வருகிறோம். தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஷா பணியாளர்களாக விடுப்பின்றி, ஓய்வின்றி 24 மணி நேரமும் மக்களிடையே நாங்கள் பணிபுரிந்து வருகிறோம்.

ஒன்றிய, மாநில அரசுகளின் அனைத்து சுகாதார மருத்துவ நலத் திட்டங்களையும் கிராமப்புறங்களில் அமுல்படுத்த நாங்கள் முழு பங்காற்றி வருகிறோம்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக நாங்கள் அரசின் அனைத்து கொரோனா தடுப்பு திட்டங்களையும் கிராம மக்களிடை விழிப்புணர்வு ஏற்படுத்திட பணிபுரிந்து வருகிகின்றோம்.

ஆனால், எங்களுக்கு பணி நிரந்தரம் இல்லை. முறையான சம்மபளம் இல்லை. ஊக்கத் தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எங்களின் மாத வருமானம் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை மட்டுமே. தற்போது அரசு துவங்கியுள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கிராமப்புறங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

15 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதாரத்துறையில் கிராமப்புற நர்சுகளுக்கு நிகராக பணிபுரிந்து வரும் எங்களை சுகாதாரத் துறையில் தகுந்த பணிகளில் நிரந்தரப்படுத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஊக்கத்தொகை மட்டுமே பெற்று வரும் எங்களுக்கு மாதம் ரூ 18ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கிட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் முழுமையாக ஈடுபட்டு வரும் எங்களுக்கு மிகச்சில மாவட்டங்களில் ரூ5ஆயிரம், சில மாவட்டங்களில் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆஷா பணியாளர்களுக்கும் ரூ.25 ஆயிரம் கொரோனா கால நிவாரணமாக வழங்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச் செல்ல 108 வாகனம் கிடைக்காதப் பொழுது பஸ்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது,

எனவே, மாவட்ட பஸ்களில் எங்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 23 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...