/* */

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர் அறிவுரை

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவது பற்றி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவுரை வழங்கி உள்ளார்.

HIGHLIGHTS

பொதுமக்களுக்கு  தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர் அறிவுரை
X

நாமக்கல் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆட்சியர் உமா பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு, கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்டஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 322 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொதுமக்களுக்கு பஞ்சாயத்தில் உள்ள சொந்த நீர் ஆதாரம் மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 78.59 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 19 டவுன் பஞ்சாயத்துக்களை சேர்ந்த 294 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், கூட்டு குடிநீர் திட்ட மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டவுன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 13.64 எம்.எல்.டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகளைச் சேர்ந்த 153 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி பகுதியில் உள்ள சொந்த நீர் ஆதாரம் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு 4.9 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் கடைகோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும். குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின்மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் தொய்வின்றி கிடைக்கும் வகையில் அனைவரும் பணியாற்றிட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை தினசரி உறுதி செய்திடும் வகையில், குடிநீர் தேவைகள் நிறைவேற்றிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில், சீரான அளவில் குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் மூலம் கோடை காலத்திலும், குடிநீர் திட்டப்பணிகளுக்கு, மின்தடை இல்லாமல் மின்சார விநியோகம் நடைபெற மாற்று ஏற்பாட்டுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், செயற்பொறியாளர் குமார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராம்மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 April 2024 9:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!