/* */

நாமக்கல் அருகே கட்டிட பணியின்போது மண் சரிவு: 2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு

நாமக்கல் அருகே கட்டிட பணியின்போது மண்சரிந்து புதைந்த 2 தொழிலாளர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்

HIGHLIGHTS

நாமக்கல் அருகே கட்டிட பணியின்போது மண் சரிவு: 2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு
X

நாமக்கல் அருகே கட்டிட பணிகளை மேற்கொள்ளும் போது மண்சரிந்து, மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நாமக்கல் அடுத்துள்ள நல்லிபாளையத்தில் விஜயகுமார் என்பவர் வீட்டிற்கு அஸ்திவாரம் பறிக்கும் பணியில் இன்று காலை முதல் கட்டிட தொழிலாளிகளான முதலைப்பட்டியை சேர்ந்த சின்னுசாமி மற்றும் தாதம்பட்டியை சேர்ந்த சுப்ரமணி ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

சுமார் 10 அடி அளவில் குழி பறித்த போது தொழிலாளிகள் சின்னுசாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் மீது மண் சரிந்து குழிக்குள் புதைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், அப்பகுதியினர் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டார்.‌ இருப்பினும் மீட்க முடியாததால் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுற்றியுள்ள மண்ணை அகற்றி அவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கடும் முயற்சியில் ஈடுபட்டு உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 25 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க