/* */

மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க மூலிகை பூச்சி விரட்டி பயன்படுத்த ஆலோசனை

மயில்களால் பயிர்களை சேதம் அடைவதை தடுக்க, மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம் என வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க  மூலிகை பூச்சி விரட்டி பயன்படுத்த ஆலோசனை
X

கோப்புப்படம் 

நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக்கரையோர பகுதிகளான, பள்ளிபாளையம், பரமத்தி வேலூர், மோகனூர் போன்ற பகுதிகளிலும், கொல்லிமலை, நாமக்கல், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், பரவலாக, வாழை, கரும்பு, நெல், நிலக்கடலை, சோளம், காய்கறிகள் மற்றும் பயறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. காவிரி கரையோரத்தில் ஆற்று நீரையும், மற்ற இடங்களில், வாய்க்கால் மற்றும் கிணற்று நீரையும் பயன்படுத்தி அதிக அளவில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில், நமது தேசிய பறவையான மயில், மாவட்டம் முழுவதும் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மயில்கள், கூட்டம் கூட்டமாக சென்று, விளை நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை கடித்து நாசம் செய்து வருகிறது. அவற்றை விரட்டினாலும், கூட்டம் கூட்டமாக வந்து செல்வதால், கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், கடலை, நெல், சோளம் போன்ற பயிர்களை மயில்கள் அதிக அளவில் அழித்து வருகிறது. தேசிய பறவை என்பதால், விவசாயிகள் அவற்றை விரட்டி மட்டுமே விடுகின்றனர். மயில்களால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். உணவுக்காக கூட்டம் கூட்டமாக வயல்களுக்கும் புகுந்து வேட்டையாடுவதால், பயிர்கள் அழிந்துவிடுகின்றன. இந்த நிலையில், மயில்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில், மோகனூர் ஒன்றியம், குமரிபாளையத்தில், வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இது குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்து கூறுகையில், தற்போது, மோகனூர் வட்டாரத்தில், மயில்கள் மூலம், பல்வேறு வேளாண் பயிர்கள் சேதம் அடைகின்றன. அவற்றை தடுப்பதற்கு, ஹெர்போலிவ் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம். இதன் மூலம், மயில்கள், காட்டுப்பன்றிகள், மான்கள், முயல்கள், எலிகள், பறவைகள் போன்றவற்றை வயலுக்குள் வர விடாமல் பயிர்களை பாதுகாக்கலாம். இந்த பூச்சி விரட்டி, சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது என அவர் கூறினார்.

தொடர்ந்து, வேளாண் அலுவலர் சுரேஷ், செயல்விளக்கம் செய்து காண்பித்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண் அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Updated On: 8 July 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு