செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் சேர, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் (பைல் படம்)
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு பட்டயப் படிப்பில் சோ்ந்திட மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் செண்பகவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சாா்பில், அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெ க்னிக்) முதலாமாண்டு பட்டயப் படிப்பில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம்.
அவ்வாறு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செய்யாறு அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள சேவை மையத்தின் வாயிலாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேர பத்தாம் வகுப்பு தோச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தோச்சி பெற்றிருக்க வேண்டும். செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் சிவில் மொக்கானிக்கல், இஇஇ, இசிஇ, சிஎஸ்இ என 5 பாடப்பிரிவுகள் உள்ளன.
10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினா் சமா்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதாரா் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளவாறு பதிவேற்றம் செய்யலாம்.
பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினா் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.
நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்புக்கு இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு மே10-இல் தொடங்கி மே 24 வரை நடைபெறும்.
மேலும், விவரங்களுக்கு 04182 - 224275 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu