/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஐடிஐ தொழிற்பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு..!

நாமக்கல் மாவட்டத்தில் ஐடிஐ தொழிற்பயிற்சியில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஐடிஐ தொழிற்பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு..!
X

ஐடிஐ சேர்வதற்கு காலஅவகாசம் (கோப்பு படம்)

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில், காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில், 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி, 4.0 தொழிற் பிரிவுகளுக்கு இம்மாதம் 30ம் தேதி வரையும், என்சிவிடி பிரிவுகளுக்கு 23ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஐடிஐ தொழிற் பயிற்சி நிலையங்களில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட் (என்சிவிடி) ஓராண்டு (பெண்கள் மட்டும்) 7 இடங்கள் காலியாக உள்ளன. தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் கணினி பராமரிப்பு (என்சிவிடி) 2 ஆண்டு (பெண்கள் மட்டும்) 8 இடங்கள் காலியாக உள்ளன. கட்டிட பட வரைவாளர் (என்சிவிடி) 2 ஆண்டு, 5 இடங்கள் காலியாக உள்ளன. கம்மியர் ஆட்டோ பாடிரிப்பேர் (என்சிவிடி) ஓராண்டு 19 இடங்கள் காலியாக உள்ளன. இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் (இண்டஸ்ட்ரி 4.0) ஓராண்டு 17 இடங்கள் காலியாக உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பும் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும், கீரம்பூரில் உள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (ஐடிஐ) நேரடியாக சென்று விண்ணப்பித்து விருப்பமான தொழிற்பிரிவுகளை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெறலாம். மேலும், விபரங்களுக்கு 04286-299597, 98428 57035, 89460 95841 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Sep 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?